மட்டக்களப்பு பொலிஸ் பிரிவில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிக்கு உட்பட்ட மாமாங்கம் மயானத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அமிர்தகழி பகுதியை சேர்ந்த 50வயதுடைய நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் சடலத்திற்கு அருகில் விஷப் போத்தல் ஒன்றும் காணப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை