மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றுக்கொண்டு இருக்கும் கிழக்கு மாகாண பேருந்து சேவை சாதனையாளர்களுக்கு காசோலை வழங்கிவைப்பு நிகழ்வில் தமிழ்மொழி முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண பேருந்து சேவை சாதனையாளருக்கான காசோலை வழங்கி வைக்கும் நிகழ்வு மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தலைமையில் இடம்பெற்றது.
திருகோணமலை மட்டக்களப்பு அம்பாறை ஆகிய 3 மாவட்டங்களைச் சேர்ந்த 150 சாதனையாளர்களுக்கு காசோலை வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
கிழக்கு மாகாணத்தில் மொத்தமாக 1450 சாதனையாளர்கள் கௌரவிக்கும் வேலைத் திட்டத்தின் முதல் கட்டமாக 30 ஆயிரம் பெறுமதியான காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து பேருந்து சேவையானது 1958 தொடக்கம் 1990 மக்கள் மயப்படுத்தபட்டிருந்தது.


