முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு பாரிய தடைகள் ஏற்படுத்தப்பட்ட போதிலும், தடைகளை உடைத்து பல்வேறு இடங்களிலும் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
முல்லைத்தீவு கடற்கரையில் சுடர் ஏற்றுவதற்காக சென்ற தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரும், வாலிபர் முன்னணி பொருளாளருமான பீற்றர் இளஞ்செழியன் மற்றும் அவரது மனைவி உட்பட பலர் சுடர் ஏற்றுவதற்காக சென்ற போது முல்லைத்தீவு கடற்கரையில் வைத்து பீற்றர் இளஞ்செழியனை முல்லைத்தீவு காவல்துறையினர் கைது செய்திருந்தனர்.