முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் பிராந்திய ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஸவச்சந்திரன் இராணுவத்தினரால் தாக்கப்பட்ட சம்பவத்தினை கண்டித்து 28.11.2021 ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்படவுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒனறியம், மட்டு ஊடக மையம் மற்றும் மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம் ஆகியன ஒன்றிணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளன.