ஊடகவியலாளர் தாக்கப்பட்டமை தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் பொலிஸாரிடமும், 59 வது படையணியின் கட்டளை தளபதியிடமும் விளக்கம் கோரப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் த.கனராஜ் தெரிவித்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் பகுதியில் இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதலில் சுயாதீன ஊடகவியலாளரான விஸ்வச்சந்திரன் என்ற ஊடகவியலாளர் தாக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்திகளை அடிப்படையாக கொண்டு 1996 ஆம் ஆண்டின் 21 ஆம் இழக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரிவு 14 கீழ் சொந்த பிரேரணையாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதன் அடிப்படையில் முல்லைத்தீவு தலைமை போலிஸ் பரிசோதகரிடமும் 59 வது படைப்பிரிவின் கட்டளை தளபதியிடமும் சம்பவம் தொடர்பான அறிக்கை கோரப்பட்டன.

மேலும் காயமடைந்த ஊடகவியலாளரிடமும் வாக்குமூலம் பெறுவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை