நாடாளுமன்றில் சுமந்திரனை கட்டித்தழுவிய பிரதமர்

இலங்கை நாடாளுமன்றில் இன்றையதினம் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதுடன் வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் விருந்துபசார நிகழ்வும் இடம்பெற்றது.

இந்த விருந்துபசார நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ உள்ளிட்ட இராஜதந்திரிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை பிரதமர் மகிந்த ராஜபக்க்ஷ மகிழுவுடன் கட்டித்தழுவி கருத்துக்களை பரிமாறிகொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அதோடு சுமந்திரனை , பிரதமர் மகிந்த ராஜபக்க்ஷ கட்டித்தழுவிய புகைப்படங்களும் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

இதேவேளை சம்பிரதாயமான இவ்வாறான நிகழ்வுகள் இடம்பெறுகையில் இராஜதந்திரிகள் கலந்துகொளவது வழமையாகும். எனினும் , இன்றையதினம் சுமந்திரன் மீது அரச தரப்பு விசேடமாக கரிசனை காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது என அங்கு சென்ற ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத் தக்கது.
புதியது பழையவை