வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு பிராந்தியத்தில் தாழமுக்கமொன்று ஏற்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் தினைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த தாழமுக்கமானது மேலும் வலுவடைந்து நாட்டின் வடக்கு கடற்பிராந்திய திசையில் பயணிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்காரணமாக வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு கடற்பிராந்தியத்தில் இடைக்கிடையே கன மழைபெய்துவருவதுடன் பலத்த காற்று வீசுவதாக வளிமண்டலவியல் தினைக்களம் அறிவித்துள்ளது.
மேலும், குறித்த கடற்பிராந்தியத்தில் மணிக்கு 60 முதல் 70 கிலோமிற்றர் வேகத்தில் காற்று வீசுமெனவும் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.
இதனால், இன்று மாலை முதல் குறித்த கடற்பிராந்தியத்தில் கடற்றொழிலில் ஈடுப்படுவதில் இருந்து விலகி செயற்படுமாறு அறிவிக்க்பட்டுள்ளது.
இதன்படி, மீனவர்கள் மற்றும் கடல்சார் ஊழியர்களை மறு அறிவித்தல் வரையில் குறித்த கடற்பிராந்தியத்திற்கு செல்ல வேண்டாமென எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.
இதேவேளை, வளிமண்டலவியல் திணைக்களத்தினால் விடுக்கப்படும் அறிவிப்புகள் குறித்து தொடர்ந்தும் அவதானமாக செயற்படுமாறும் அறிவுறுத்தல் விடுக்கபட்டுள்ளது.
