உலக வங்கியின் சர்வதேச வர்த்தக நிலையம் இலங்கை வர்த்தக திணைக்களத்துடன் இணைந்து மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளத்தின் ஏற்பாட்டில் ஒழுங்கமைத்த விழிப்புணர்வு கருத்தரங்கு நேற்று பாசிக்குடா 'அமையா' சுற்றுலா விடுதியில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட உதவி மாவட்ட செயலாளர் ஆ.நவேஸ்வரன்,மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளத்தின் தலைவர் அருளையா உலக வங்கியின் சர்வதேச வர்த்தக நிலைய அதிகாரி ஹசித்த விஜயசுந்தர, இலங்கை வர்த்தக திணைக்கள ஆராட்சி உத்தியோகஸ்த்தர் திருமதி ரேவதி மோகானந்தன்,இலங்கை வர்த்தக சம்மேளனங்களின் சிரேஸ்ட செயலாளர் நாயகம் திருமதி மனோகரி திசநாயக்க என்.ஈ.டி.ஏ. நிறுவணத்தின் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர் திருமதி கீத்தா மற்றும் சர்வதேச வர்த்தக நிலைய உத்தியோகஸ்த்தர் சுவேந்திராணி,ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
இவ் விழிப்புணர்வு கருத்தரங்கில் நோக்கமானது ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள மற்றும் ஏற்றுமதி வர்த்தகத்திற்கு தமது உற்பத்திகளை கொண்டு செல்ல உத்தேசித்துள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்களை ஒழுங்கமைத்து ஓர் எளிய இலகுவான ஏற்றுமதி வர்த்தகத்தை அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுத்துவதே ஆகும்.
அத்துடன் வர்த்தக நடைமுறைகளுக்கான படிப்படியான வழிமுறைகளை ஒழுங்கமைத்து எவ்வாறு ஏற்றுமதி வர்த்தகத்தை இலகுவாக நடைமுறைப்படுத்தி இவ் ஏற்றுமதி வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள ஏனைய பங்குதாரர்களுடன் இணைந்து நன்மைகளை பெறக் கூடிய ஓர் வழியமைப்பை ஏற்படுத்தி கொடுத்தலுமாகும்.
எனவே எமது ஏற்றுமதி வர்த்தகத்தில் சுருக்கமாக முன்னேற்றத்திற்கான பகுதிகள் மற்றும் வாய்ப்புக்களை கருத்தில் கொண்டு குறிப்பாக எமது ஏற்றுமதி வர்த்தகத்தில் உள்ள சில தடைகளை மற்றும் இடையூறுகளை அகற்றி ஓர் எளிய முறையை வரையறுக்க ஒர் வாய்ப்பாகவும் இவ் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.






