மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு மற்றும் ஆயித்தியமலை பகுதி விவசாயிகள் நூற்றுக்கு மேற்பட்ட உழவு இயந்திரங்களிலும், மோட்டார்சைக்கிள்களிலும் மட்டக்களப்பு நகர் நோக்கி பவணியாக கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
அரசாங்கம் பசளையை வழங்க வேண்டும் என கோரி இந்த கவனயீர்ப்பு நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு நகருக்குள் நுழைய முற்பட்ட குறித்த பேரணியை பொலிஸார் தடுத்து நிறுத்தி, குறித்த உழவு இயந்திரங்களை மட்டக்களப்பு நகருக்குள்ளே செல்ல அனுமதிக்க மறுத்துள்ளனர்.
எனினும், “தம்மை உள்ளே செல்லவிடாது மறுத்தால் தாம் வீதியை மறித்து போராட்டம் மேற்கொள்வதாகவும், தம்மை உள்ளே செல்ல விட்டால் வீதியில் போக்குவரத்திற்கு எந்தவித இடையூறையும் ஏற்படுத்தாமல் தமது போராட்டத்தை முன்னெடுப்பதாகவும்” போராட்டக்காரர்கள் உறுதியளித்துள்ளனர்.