மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக் கிராமமான ரிதிதென்னை பிரதேசத்திற்குள் இன்று அதிகாலை புகுந்த யானையினால் குடிசை வீடுகளும், வீட்டு தோட்ட பயிர்களும் சேதமாக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
காட்டுப்பகுதிக்குள் இருந்து ஊருக்குள் இன்று அதிகாலை புகுந்த யானை குறித்த பகுதியில் மூன்று குடிசைகளை உடைத்து சேதப்படுத்தியதுடன், வீட்டுப் பாவனைப் பொருட்களும் சேதமாக்கப்பட்டுள்ளதுடன், வீட்டுத் தோட்ட பயிர்களையும் சேதப்படுத்தி சென்றுள்ளது