தென் அந்தமான் கடற்பரப்புகளுக்கு மேலாக ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாகியுள்ளது. இது மேற்கு - வடமேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், இன்று வட அந்தமான் கடற்பரப்புகளுக்கு மேலாக ஒரு தாழமுக்கமாகவலுவடையக் கூடிய சாத்தியம்காணப்படுகின்றது.
அது தொடர்ந்தும் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து நவம்பர் 18ஆம் திகதியளவில் ஆந்திரப் பிரதேசத்திற்கு அண்மையான கரையைக் கடக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டிற்கு கிழக்காக உள்ள ஆழம் கூடிய கடற்பரப்புகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் மற்றும் கடலில் பயணம் செய்வோரும் இவ்விடயம் தொடர்பாகவும் முன்னறிவிப்புகள் தொடர்பாகவும் அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.
இதேவேளை, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போதுமழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
அனுராதபுரம்மாவட்டத்தில் சிறிதளவான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சிஎதிர்பார்க்கப் படுகின்றது.
நாடு முழுவதும் மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரித்தவேகத்தில் பலத்தகாற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
