மன்னார் மூர்வீதி பகுதியில் ஒரு தொகுதி கேரள கஞ்சா பொதிகளை தன் வசம் வைத்திருந்த 17 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த மாணவனிடம் இருந்து 4 கிலோ 700 கிராம் கேரள கஞ்சா போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பண்டுள்ளவீரசிங்க வின் பணிப்பில், உதவி பொலிஸ் அத்தியட்சகர் சஞ்ஜீவ பண்டார மற்றும் மன்னார் மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவு தற்காலிக பொறுப்பதிகாரி சி.ஐ.மணலகுமார,உப பொலிஸ் பரிசோதகர் ராமநாயக்க உப பொலிஸ் பரிசோதகர் வணசிங்க தலைமையிலான குழுவினர் மேற்பட்ட கஞ்சா பொதியை கைப்பற்றியதுடன் , மாணவனையும் கைது செய்துள்ளனர்.
மேற்படி கைப்பற்றப்பட்ட கஞ்சா மற்றும் சந்தேக நபர் மேலதிக விசாரணையின் பின் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

