கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினருக்கு - குற்றப் புலானாய்வு பிரிவுக்கு வருமாறு அழைப்பு

கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் உப தலைவருமான இந்திரகுமார் பிரசன்னாவை விசாரணைக்கு உட்படுத்த சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் காரியாலயத்துக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

நேற்று அவரது வீட்டுக்கு வந்த இரண்டு புலனாய்வுத்துறையினர் அவரிடம் வாக்குமூலம் பெற வேண்டும் என்பதற்காக நாளை அவரை சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சர் காரியாலயத்தில் இருக்கும் குற்றப் புலானாய்வு பிரிவுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

எதற்காக இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகளிடம் கேட்டபோது நாளைய தினம் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சர் காரியாலயத்திற்கு சமூகமளித்து வாக்குமூலத்தை பதிவு செய்யும்படி அவர்கள் பணித்து உள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊடகவியலாளர்கள் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் அரசியல்வாதிகள் முகநூல் போராளிகள் போன்றவர்கள் தொடர்ச்சியாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டும் அச்சுறுத்தும் நிலைமை மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை