திருகோணமலை, கிண்ணியா நகர சபையின் 2022 ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் தோற்கடிப்பு

திருகோணமலை, கிண்ணியா நகர சபையின் 2022 ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நேற்று தோல்வியடைந்துள்ளது.

தவிசாளர் எஸ்.எச்.எம்.நளீம் தலைமையில் நேற்று மாலை வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பித்திருந்தார்.

இதனை தொடர்ந்து பகிரங்க வாக்கெடுப்பு இடம் பெற்றதையடுத்து எதிராக 07 வாக்குகளும் ஆதரவாக 05 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டது.

இச் சபையில் மொத்தமாக தவிசாளர் உட்பட 13 உறுப்பினர்கள் அங்கம் வகித்து வரும் நிலையில் நல்லாட்சிக்கான தேசிய முண்ணனியின் உறுப்பினர் நாஸிக் மஜீத் சபை அமர்வுக்கு  சமூகமளிக்கவில்லை .
புதியது பழையவை