மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவில் - நாட்டுத் துப்பாக்கிகள் மீட்பு

மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொத்தானை பகுதியில் ஒரு தொகுதி நாட்டுத் துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளது.

களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த நாட்டுத் துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மீட்கப்பட்ட துப்பாக்கிகள் தொடர்பான அதி தீவிர விசாரணைகளை கரடியனாறு பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் சேர்ந்து மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை