திருக்கோவில் பொலிஸ் நிலைய துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்ட சந்தேக நபரை எதிர்வரும் ஜனவரி மாதம் 06ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அக்கரைப்பற்று நீதவான் எம்.எச்.எம். ஹம்ஸா முன்னிலையில் சந்தேக நபரை சனிக்கிழமை(25) மாலை ஆஜர் செய்யப்பட்டபோது அவர் இந்த உத்தரவை வழங்கினார்.
துப்பாக்கிச் சூடு நடத்திய சார்ஜன்ட் குமார என்பவர் தனது வாகனத்தில் தப்பித்து மொனராகல – எத்திமல பிரதேச பொலிஸ் நிலையத்தில் சரணடைந்திருந்தார்.