சந்தையில் நிலவும் பால் மா தட்டுப்பாடு சம்பந்தமாக அரசாங்கத்திடம் எவ்வித தீர்வுகளும் இல்லை என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள வர்த்தக அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
இதன்போது மேலும் பதில் வழங்கிய அவர்,
''இறக்குமதி செய்வதற்கு தேவைப்படும் டொலர் தட்டுப்பாடு தொடர்பில் நிலவும் காணப்படும் பிரச்சினையில், அத்தியாவசிய பயன்பாட்டு பொருட்களுக்கே முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.
அசாதாரணமாக இலாபம் பெற்ற வெளிநாட்டு நிறுவனங்கள், இவ்வாறான கஷ்டமான சந்தர்ப்பத்தில் குறுகிய காலத்திற்கு தமது விநியோகஸ்தர்களுக்கு கடன் வசதியை ஏற்படுத்திக்கொடுத்து பால் மாவை விநியோகிக்க முடியும்'' என குறிப்பிட்டுள்ளார்.