ஆண்ட தமிழ்ஊர் ஆரையம்பதி மண்ணில்!
ஆண்டு ஐம்பத்தி இரண்டு மே பதினெட்டில்.!
அவதரித்த ஆளுமைத்தமிழன் வே.தவராசா அவர்கள்!
இரண்டாயிரத்து டிசம்பர் பத்தில் இறையடி சேர்ந்தார்!
அறுபத்து ஒன்பது ஆண்டுகள் வாழ்ந்து ஆகுதியானார்!
பிறப்பில் இருந்து இறப்பு நாள் வரைக்கும்!
இருப்பு தமிழர்க்கு வடகிழக்கு தாயகம் என்று!
இதயத்தால் நேசித்த இனப்பற்றுப்புனிதர்!
எம்மண்ணின் விடியலை எப்பவுமே நேசித்தார்!
எமைவிட்டுப்பிரிந்ததால் ஏங்குதே எம் மனம்!
ஆசிரியர் பணியால் மாணாக்கர் கல்வி வளர்ந்தது!
ஆற்றல் உழைப்பால் சமூகத்தின் சேவை உயர்ந்தது!
ஆளுமை அவர் என்பதால் அனைத்தும் சிறந்தது!
பேச்சுத்திறனால் சபை எல்லாம் அதிர்ந்தது!
அவர் மூச்சு நின்றதால் எங்கள் கண்ணீரும் சொரிந்தது!
கலை இலக்கிய முத்தமிழ் காவலர் இவர்!
கணித பாடத்தின் கைதேர்ந்த அறிவொளி!
கல்வியை வளர்த்ததில் காருணிய மனிதர்!
கன்னித்தமிழிழை உயிராய் மதித்த மகான்!
மண்ணில் மறைந்தாரே மறப்போமா நாங்கள்!
போற்றுதற்கு உரியவர் பொறாமை அற்ற பெரியவர்!
பார்பதற்கு கம்பீரம் பார்வையிலும் நேர்மை!
தோற்றத்திலும் உறுதிமேனி தோள்களிலும் வீரம்!
வாட்டமில்லா நிமிர்நடை வார்த்தைகளில் உண்மை!
தேட்டமெலாம் தமிழே என்று தேசியத்தின் பற்றாளர்!
நேற்றுவரை இருந்தமகான் நினைவிழந்து துகில்கின்றார்!
காற்றில் உயிரை காலன் எடுத்துச்சென்றமையால்!
கரம்பிடித்த அன்பு மனைவி ஆருயிர் பிள்ளைகளும்!
பாசமருமக்கள் பேரக்குழந்தைகள் உற்றார் உறவுகளும்
கட்டித்தழுவி ஒப்பாரி வைத்து ஓலமிடுகின்றனர்!
கொள்கைப்பற்றாளர் கொடுமைக்கோ இவர் எதிரி!
அல்லல் வந்தகாலத்திலும் அடிமையை விரட்டியவர்!
வள்ளல் மனம் படைத்த வாய்மை தவறா புனிதர்!
எல்லை இல்லா நற்பணிகள் எம்மண்ணில் விதைத்தவர்!
எப்போதும் தமிழ் உணர்வால் எம்முன்னே வாழ்ந்தவர்!
இலங்கை தமிழரசுக்கட்சியின் ஆயுள்கால செயல் வீரன்!
இனப்பற்றுக்கொண்ட மட்டு மாநகரசபையின் உறுப்பினர்!
மட்டக்களப்பு தமிழ்சங்கத்தின் மட்டற்ற செயலாளர்!
தடம்மாறா தமிழ்தேசியத்தின் திடம் கொண்ட உத்தமர்!
விடைபெற்றுச்சென்றாரே விடியும் நாள் காணும் முன்னே!
-அம்பிளாந்துறையூர் அரியம்-