சம்பந்தன் மற்றும் ஹக்கீம் இன்று(31) சந்திப்பு – இணக்கப்பாடு எட்டப்படுமா?
இந்தப் பேச்சுவார்த்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனின் இல்லத்தில் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்,தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களும் பங்கேற்கவுள்ளனர்.
இதன் போது 13 ஆம் திருத்தம் உள்ளிட்ட இணக்கப்பாடின்றி காணப்படும் பல்வேறு விடயங்கள் தொடர்பில் சிறுபான்மைக்கட்சிளிடையே இறுதித் தீர்மானமொன்றை எட்டும் நோக்கில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
இந்தியப் பிரதமருக்கு சிறுபான்மைக்கட்சிகள் இணைந்து அனுப்பவுள்ள கடிதத்தின் சில விடயங்கள் தொடர்பில் ஏற்கனவே ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளிடையே முரண்பாடான கருத்துக்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.