கிளிநொச்சி தனியார் காணியொன்றில் இருந்து இதுவரை ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி, கோரக்கன் காட்டுப்பகுதியில் உள்ள தனியார் காணியொன்றில் இருந்து நேற்று காலை 9 மணி முதல் பிற்பகல் வரை முன்னெடுக்கப்பட்ட அகழ்வின் போதுஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதிவான் கட்டளைக்கு அமைவாக விசேட அதிரடிப்படையினர் காவல்துறையினர் அகழ்வுப் பணி மேற்கொள்ளப்பட்டது.
கிளிநொச்சி ,கோரக்கன் காட்டு பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் அடையாளம் காணப்பட்ட இடத்தில் வெடி பொருட்களை மீட்கும் பணி நேற்றைய தினம் கோரக்கன் கட்டு கிராம அலுவலர் கோணமலை சேகர் முன்னிலையில் அகழ்வுப் பணி மேற்கொள்ளப்பட்டது.




