வவுனியா பிரதேச செயலகமும், கலாசார பேரவையும் இணைந்து ‘வவுனியம்-05’ நூலை வெளியிட்டு வைத்துள்ளன.
நூல் வெளியிட்டு வைக்கும் நிகழ்வு இன்று காலை 9.30 மணிக்கு மாவட்ட செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.
வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிழ்வில், முதன்மை அதிதியாக வவுனியா பல்கலைகழக துணைவேந்தர் ரி.மங்களேஸ்வரன் கலந்துகொண்டார்.
சிறப்பு அதிதிகளாக கலாபூசணம் இ.சிவசோதி, தமிழ்நிதி அருணா செல்லத்துரை ஆகியோரும், கௌரவ அதிதியாக கலாநிதி நா.செந்தூர்ச் செல்வனும் கலந்துகொண்டனர்.
மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில், நூலை துணைவேந்தர் ரி.மங்களேஸ்வரன் வெளியிட்டு வைக்க அதன் முதற் பிரதியை தமிழ்மணி கே.மேழிக்குமரன் பெற்றுக்கொண்டார்.
நூலிற்கான ஆய்வுரையை ஆசிரியர் சி.வரதராஜன் நிகழ்த்தியிருந்தார்.பதிலுரையை நூலாசிரியர் நிகழ்த்தியிருந்தார்.