பால் மாவின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, 400 கிராம் பால்மா பொதியொன்றின் விலையினை 60 ரூபாவினாலும், ஒரு கிலோகிராம் பால்மா பொதியொன்றின் விலையினை 150 ரூபாவினாலும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவு அமுலுக்கு வரும் வகையில் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது 400 கிராம் பால் மா பொதி 480 ரூபாவுக்கும், ஒரு கிலோ கிராம் பால் மா பொதி ஆயிரத்து 195 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த விலை அதிகரிப்பிற்கு அமைவாக இன்று நள்ளிரவு முதல், இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் பால்மா பொதியொன்று 1,345 ரூபாவுக்கும், 400 கிராம் பொதியொன்று 540 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படும் எனப் பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
புதியது பழையவை