முல்லைத்தீவில்-புகையிரத விபத்தில் ஒருவர் பலி


முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பகுதியில் நேற்று இடம்பெற்ற புகையிரத விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முழங்காவிலைச் சேர்ந்த 50 வயதுடைய 02 பிள்ளைகளின் தந்தையான பி.பத்மசீலன் என்பவரே உயிரிழந்தவராவார்.

முறிகண்டியிலிருந்து மோட்டார் சைக்கிளில் வீடுநோக்கி பயிணத்த குறித்த நபர், தரித்திருந்த ரிப்பர் வாகனத்தை கடந்து புகையிரத கடவையை கடக்க முற்பட்டபோதே விபத்துச் சம்பவித்துள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிந்துள்ளார்.
புதியது பழையவை