நகைகளுக்காக கண்டம் துண்டமாக வெட்டினேன்! மட்டக்களப்பு சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் வழங்கிய பரபரப்பு வாக்கு மூலம்

இந்த நிலையில் வீட்டின் முன்பதியில் இருந்த களஞ்சிய அறைக்கு எஜமானியம்மா சென்றுள்ளபோது அவரை வேலைக்காரி பின் தொடர்ந்து சென்று அறையிலுள்ள எஜமானியம்மாவை வெட்ட தனது தோல் பையில் வைத்திருந்த கத்தியை எடுத்தபோது எஜமானியம்மா அதனை கண்டு வேலைக்காரியை தள்ளிய போது வேலைக்காரியின் கையில் கத்திபட்டதில் அவளுக்கு காயம் ஏற்பட்டதைடுயடுத்து எஜமானியம்மாவை பிடித்து தள்ளிவிட்டபோது அவர் கீழே தலைகுப்பற வீழ்ந்தபோது அங்கு இருந்த தேங்காயில் தலைஅடிப்பட்டு கீழே கிடந்த எஜமானியம்மா சத்தம் போடதவாறு கழுத்தை சுற்றி மின்னல் வேகத்தில் கழுத்தை  கத்தியால் சுமார் 10 தடவை படபடவென வெட்டியுள்ளார்.

பின்னர் அவர் ஓடமுடியாதாவாறு முழங்கால்கள் இரண்டையும் வெட்டியதுடன் அவரின் கழுத்தில் இருந்த சுமார் 25 பவுண் தாலிக் கொடியை கழற்றியபோது தலைமுடி தாலியில் சிக்கியதையடுத்து தலைமுடியை வெட்டி தாலிக் கொடியை எடுத்துக்கொண்ட பின்னர்  கையில் அணிந்திருந்த காப்புக்களை கழற்ற அங்கிருந்த பலகைகட்டையில் கையை வைத்து கையின் மணிகட்டு பகுதியை கத்தியால் வெட்டி துண்டாக்கிவிட்டு காப்புக்களை கழற்றிக்கொண்டு.

கைவிரலில் இருந்த மோதிரங்களையும் கழற்றிவிட்டு காதில் இருந்த தோட்டை கழற்ற காதை தோட்டுன் கத்தியால் அறுத்து எடுத்து கொண்டு 46 பவுண் தங்க ஆபரணங்களையும் கொள்ளையிட்டு அதனை தோல்பையில் பையில் எடுத்து வைத்துகொண்டு  கொண்டு கத்தியை அங்குவிட்டுவிட்டு அறையில் இருந்து வெளியேற முற்பட்டுள்ளார்.

இந்த நிலையில் வீட்டின் வெளியே சென்ற வேலைக்காரியின் தந்தையர் அங்கு சென்ற போது மகள் செய்த கொடூரத்தை கண்டு மகள்மீது தாக்கி என்ன செய்துள்ளாய் என இருவரும் சண்டிபிடித்துக் கொண்ட போது ஏற்பட்ட சத்தத்தையடுத்து சோபாவில் நித்திரையில் இருந்த எஜமானியின் மகள் விழித்தெழுந்து வந்தபோது அங்கு தாயார் இரத்த வெள்ளத்தில் கிடப்பதைகண்டு அதிர்ந்து கத்தியுள்ளார்.

இந்த கத்தல் சத்தம் கேட்டு முதல் மாடியில் படுத்திருந்த கணவர் பதற்றத்துடன் கீழ் இறங்கி வந்தபோது மனைவி இரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து சத்தமிட்டார்.

இதன்போது கொள்ளையடித்த நகைகளுடன் வேலைக்காரியும் அவளது தந்தையும் அங்கிருந்து வெளியேறி தப்பி ஓடி வீதிக்கு சென்றபோது வீதியில் இருந்த முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் அவர்களை பின்தொடர்ந்துடன் அங்கு கடைகளில் இருந்தவர்களும் ஒன்றிணைந்து அவர்களை மடக்கிபிடித்தனர் என பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி முகமட் ஜெஸ்லி தலைமையில் பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் வேலைக்காரி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு திங்கட்கிழமை இரவு சென்ற மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம்.றிஸ்வான்  சம்பவ இடத்தை பார்வையிட்டு சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் கொலைக்கு பயன்படுத்திய கத்தி உள்ளிட்ட தடையப் பொருட்களை சேகரித்து கொள்ளுமாறும் உத்தரவிட்டார். 

கொள்ளையடிக்கப்பட்டு மீட்கப்பட்ட 46 பவுண் தங்க ஆபரணங்கள், கொலைக்கு பயன்படுத்திய கத்தி மற்றும் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிரி கமராவில் பதிவான சிசிரி ஒளித் தொகுப்புக்கள்  அடங்கிய விசிடி  எனப்படும் வன்தட்டு போன்ற தடையப் பொருட்களை மீட்ட பொலிசார்  கைது செய்யப்பட்ட வேலைக்காரி மற்றும் அவளது தந்தை ஆகிய இருவரையும்  மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம்.றிஸ்வான் முன்னிலையில்  செவ்வாய்க்கிழமை (21) ஆஜர்படுத்தியபோது அவர்களை எதிர்வரும் ஜனவரி 4ம் திகதி 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.   

இந்த கொலை சம்பவத்தினால் மட்டக்களப்பு மக்கள் மட்டுமல்ல நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் அதிர்சிக்குள்ளாகி இருப்பதுடன் அச்சம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதியது பழையவை