திருகோணமலை - அக்போபுர பொலிஸ் பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி மணல் அகழ்வில் ஈடுபட்ட மூன்று உழவு இயந்திரங்களைக் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று(9) காலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலும் தெரிவிக்கையில்,
கந்தளாய் - சீனிபுர ரங்கன பகுதியில் சட்ட விரோதமான முறையில் மணல் அகழ்ந்து உழவு இயந்திரத்தில் ஏற்றிக்கொண்டிருந்த வேளையில் சீனிபுர இராணுவ புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கமைய மூன்று உழவு இயந்திரங்களைக் கைப்பற்றியுள்ளனர்.
அத்துடன் சந்தேக நபர்கள் தலைமறைவாகியுள்ளனர்.