மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தியாகராஜா சரவணபவனின் தாயார் காலமானார்

மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தியாகராஜா சரவணபவனின் தாயார் ரஞ்சிதம் சொர்ணலெட்சுமி தியாகராஜா புதன்கிழமை மாலை (08) தனது 85 ஆவது வயதில் கல்லடியிலுள்ள தனது இல்லத்தில் கொரோனா தொற்றினால் காலமானார்.

அன்னார் முன்னாள் கல்லடி சிவானந்தா வித்தியாலய அதிபரும், மட்டக்களப்பு மாநகரசபையின் முன்னாள் முதல்வரும், முன்னாள் மட்டக்களப்பு வலய கல்விப் பணிப்பாளரும், முன்னாள் மாகாண கல்விப் பணிப்பாளரும் மற்றும் கிழக்கு மாகாண கல்வி கலாசார அமைச்சின் முன்னாள் செயலாளருமான அமரர் கந்தையா தியாகராஜாவின் மனைவியுமாவார்.
புதியது பழையவை