விமானங்களுக்கான எரிபொருளை விநியோகிப்பதற்கு தேவையான டொலரை வழங்குமாறு ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்திடம் பெட்ரோலிய கூட்டுத்தாபனம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனம் மேலும் 330 மில்லியன் டொலரை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்துக்கு செலுத்த வேண்டியுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இது குறித்து உத்தியோகபூர்வமாக விமான சேவை நிறுவனத்திற்கு அறிவித்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, மின்சார சபையின் எரிபொருள் தேவைக்கு டொலர் தேவைப்படுவதால் அதற்கு பொருத்தமான வழிமுறையை முன்னெடுக்குமாறு எரிசக்தி அமைச்சு, இலங்கை மின்சார சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளது.