மட்டு-போரதீவுப்பற்று பிரதேசத்தில் ஸ்ரீ சக்தி வேலாயுதர் ஆலய வளாகத்தில் திடிரென்று விரைந்த தொல்பொருள் அதிகாரிகள்

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவு பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட விவேகானந்த புரம் அம்மன் குளம் கிராமத்தில் காணப்படும் மிகவும் பிரசித்தி பெற்ற புல்லுமலையுல் அமையப்பட்ட ஸ்ரீ சக்தி வேலாயுதர் ஆலய வளாகத்தில் திடிரென்று விரைந்த தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்கள அதிகாரிகள் கிராம வாசிகளுக்கு தெரியப்படுத்தாமல் இவ்விடம் தொல்லியல் இடம் பதாதையை நட்டு சென்றுள்ளனர்.

அன்று குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் இன்று குமரன் இருக்கும் மலை எல்லாம் தொல்லியல் பதாதைகள் இருக்கும் பிறகு சாந்தமான துறவிகள் இருப்பர் இவ் செயல்பாடு சம்மந்தமாக அக் கிராம இளைஞர்கள், மக்கள் மேலும் கூறிய விடயங்களாக இவ் மலையில் ஆதியாக முருக வழிபாடு இருந்ததாகவும் முருகன் ஆலயத்தில் நேர்த்தியாக பல பக்த அடியார்கள் வந்து பூசை நிகழ்வுகள் செய்வதாகவும் கூறியதோடு கடந்த சில மாதங்களுக்கு முன்பதாக சில பெளத்த மத குருமார் ( பிக்குகள்) வந்து பார்வையிட்டு சென்றனர்.

அதன் பின்னர் தற்போது இவ்வாறு தொல்லியல் இடமாக பதாதைகள் நடப்பட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவித்ததோடு மேற்படி பிரச்சினைக்கு உரிய தீர்வை பெற்று தருவதோடு எமது ஆலய வளாகத்தை பாதுகாத்து தருமாறும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
புதியது பழையவை