மட்டக்களப்பு நகரில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது சமைக்கும் பகுதியில் விலங்குகளுடனும், சுகாதாரத்திற்கு தீங்கை விழைவிக்கும் கழிவு நீரினை திறந்த வெளியினுள் வெளியேற்றிய உணவகம் பொதுச்சுகாதார பரிசோதகரினால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
இதன்போது மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையின் போது உரிமையாளரிற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், 30,000 ரூபாய் தண்டப்பணம் வழங்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி ரிஸ்வான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.