இந்து கலாசார உடையுடன் நல்லூர் கந்தனை வழிபட்டார்-சீன தூதுவர்


வடக்கிற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள சீன தூதுவர் இன்றைய தினம் வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தன் ஆலயத்திற்கு வருகை தந்து நல்லூர்கந்தனை வழிபட்டார்.

இந்து கலாச்சார முறைப்படி வேட்டி அணிந்து நல்லூர் ஆலயத்திற்கு வருகை தந்த தீர சீனத் தூதுவர் ஆலய உள்வீதியினை வலம் வந்து பெருமானுக்கு அர்ச்சனை செய்து பூசை வழிபாட்டில் கலந்து கொண்டார்.
புதியது பழையவை