மிதிகமவில் நேற்று (22) மாலை இனந்தெரியாத ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
மிதிகம சந்திக்கு அருகில் உள்ள ஹோட்டல் ஒன்றின் முன்பாக இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட நபர் சிகிச்சைக்காக மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்கள் மோட்டார் சைக்கிளை மிதிகம புகையிரத நிலையத்திற்கு அருகில் விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
வெலிகம காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.