மீரிகம புகையிரத கடவையில் இன்று காலை டிப்பர் ஒன்று புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் ரயிலுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
விபத்தை அடுத்து பிரதான ரயில் பாதையில் போக்குவரத்தில் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மீரிகம – திவுலபிட்டிய பிரதான வீதியில் பயணித்த டிப்பர் ரக வாகனம் மீரிகம ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள ரயில் கடவையின் ஊடாக கவனக்குறைவாக பயணித்துள்ளது.
ரயில் கடவையை மீறி லொரி பயணிக்க முட்பட்டதினாலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.