மட்டக்களப்பு மாநகரசபையின் புதிய ஆணையாளராக நிர்வாக சேவை (தரம் 01) அதிகாரியான பொறியியலாளர் ந.சிவலிங்கம் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
இன்று காலை மட்டக்களப்பு மாநகரசபைக்கு வருகைதந்த புதிய ஆணையாளரை மாநகரசபையின் பிரதி முதல்வர் க.சத்தியசீலன் மற்றும் உத்தியோகத்தர்கள் வரவேற்றனர்.
அதனை தொடர்ந்து ஆணையாளர் கையெழுத்திட்டு தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன்,மாநகரசபை உறுப்பினர்கள்,பிரதி ஆணையாளர் உ.சிவராஜா,மாநகரசபை உத்தியோகத்தர்கள் முன்னிலையில் கடமையினை பொறுப்பேன்றார்.
இதன்போது மாநகர முதல்வர் மற்றும் உத்தியோகத்தர்களினால் புதிய ஆணையாளருக்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.