இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியாா் பேருந்துகளின் கட்டணங்களில் அதிகரிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி ஆரம்பக் கட்டணங்கள் 3 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 17 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டண அதிகரிப்பு 2022 ஜனவரி 5ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என்று ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
எரிபொருட்களின் விலையில் அதிகரிப்பு ஏற்படுத்தப்பட்ட நிலையில் பேரூந்து கட்டணங்களையும் அதிகரிக்கவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.