இயேசு போதித்த அமைதியும் அன்பும் உலகம் முழுவதும் பரவட்டும்-வடக்கு ஆளுநர்

வட மாகாண ஆளுநர் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தனதுநத்தார் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
நத்தார் தினம், தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள தனது வாழ்த்துச் செய்தியில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இயேசு கிறிஸ்துவின் பிறப்புடன் தொடர்புடைய மிக முக்கியமான மதரீதியானதொரு நன்நாளாகும்
அது இயேசு கிறிஸ்துவின் போதனைகள் மற்றும் நடைமுறை ரீதியில் வெளிப்படுத்திய அமைதி, அன்பு, கருணை என்பன நாகரீகமான மனித சமுதாயத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.

நத்தார் தினம், கிறிஸ்தவ குடும்பங்கள் ஒன்று கூடக்கூடியதும் பரிசுகளைப் பரிமாறிக் கொள்ளும், ஆட்சேபனைகளை மறக்கும், பிணைப்பைப் புதுப்பிக்கும் சிறப்புமிக்க ஒரு நாளாகும்
கொவிட் – 19 நோய்த்தொற்றை எதிர்கொண்டுள்ள நிலையில், சமூக, பொருளாதார , மற்றும் கலாசார ரீதியில் செயலற்ற நிலையில் இருக்கும் உலகை மீண்டும் மீட்டெடுக்க இந்த மத நிகழ்வைப் பயன்படுத்த முடியும்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் உயிர்த்த ஞாயிறு அன்று நடந்த கொடூரத் தாக்குதலின் கசப்பான வலியுடன் இந்நாட்டிலுள்ள கிறிஸ்தவர்கள் இன்றும் நத்தார் பண்டிகையைக் கொண்டாடுவதை நாம் மறந்துவிடக் கூடாது.
இயேசு கிறிஸ்து போதித்த அமைதியும் அன்பும்
உலகம் முழுவதும் பரவட்டும்
அனைத்து இலங்கையர்களுக்கும், உலகளாவிய அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் நத்தார் நல்வாழ்த்துக்கள்.
அதுவே எனது பிரார்த்தனை.என தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை