சுனாமி தாக்கத்தினால் கிழக்கு மாகாணம் மிகவும் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று சுனாமியால் காணாமல்போய் பின்னர் வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்ட ஆண் குழந்தையான அபிலாஷ், 17 வருடங்களுக்கு பின்னர் ஆழிப்பேரலை நினைவுத்தூபியில் அஞ்சலி செலுத்தினார்.
அபிலாஷ் என்ற குழந்தைக்காக அப்போது 9 தாய்மார்கள் உரிமை கோரியிருந்தனர்.
பின்னர் மரபணு பரிசோதனைமூலம் மட்டக்களப்பு குருக்கள் மடத்தைச் சேர்ந்த ஜெயராசா தம்பதியினரது என உறுதிப்படுத்தப்பட்டு பின்னர் அக்குழந்தை அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
இதனால் அபிலாஷை ‘சுனாமி பேபி’ என்றே அனைவரும் அழைக்கின்றனர்.
தற்போது 17 வயதான அபிலாஷ் தனது இல்லத்தில் வைத்துள்ள சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் தூபியில் இன்று பெற்றோர் உறவினர்களுடன் இணைந்து சுடர் ஏற்றி மலரஞ்சலி செலுத்தி அஞ்சலி செலுத்தினார்.