கீரிமலை ஜே/226 காங்கேசன்துறை மேற்கு, ஜே/223 பகுதிகளில் 21 பேருக்கு சொந்தமான 30 ஏக்கர் காணிகளை படையினருக்கு சுவீகரிக்க நில அளவைத் திணைக்களத்தினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில், குறித்த எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது காணி உரிமையாளர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்கள் எனப்பலரும் எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொண்டனர்.