பாகிஸ்தானில் சிந்து மாகானத்தில் உள்ள இந்து ஆலயமொன்றிலுள்ள கடவுளின் சிலை உடைக்கப்பட்டதால் இந்து மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
முஸ்லிம் மக்கள் அதிகமாக வசித்து வரும் பாகிஸ்தானில் இந்து, சீக்கியா, பார்சி போன்ற மதங்களை சேர்தவர்களும் குரைந்த அளவில் வாழ்ந்துவருகின்றனர்.
இந்நிலையில் சில அமைப்புகள் சிறுபான்மை மக்கள் மீதும் அவர்களது வழிப்பாட்டு தலங்கள் மீதும் தொடர்ந்து தாக்குல் நடத்தும் சம்பங்கள் அடிக்கடி இடம்பெறுகின்றது.
இதனால் தங்களுக்குரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று இந்து மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.