தனியார் நிறுவனமொன்றுக்கு சொந்தமான சிறிய ரக விமானமொன்று அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
பயாகல மற்றும் பேருவளை ஆகிய நகரங்களுக்கு இடையில் இந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இயந்திரத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் ஏற்பட்ட சேதவிபரங்கள் குறித்த தகவல்கள் எவையும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, விமான தரையிறக்கப்பட்ட இடத்துக்கு விமானப்படை குழுவொன்று சென்றுள்ளதாக விமானப்படையினர் தெரிவித்துள்ளனர்.