சீனாவின் மனிதக் கழிவுக்கு பணம் செலுத்தப் போகும் இலங்கை மக்கள்

சீனாவின் மலக் கழிவுக்கு இலங்கை மக்கள் பணம் செலுத்த வேண்டிய நிலை வரும் என எவரும் நினைத்திருக்க மாட்டார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
சீன உரக் கப்பலுக்கு நட்டஈடாக நாட்டு மக்களின் வரிப் பணமே வழங்கப்பட உள்ளது. அரச தலைவர், நிதி அமைச்சரின் அமெரிக்க வங்கிக் கணக்கிலிருந்து பணம் அறிவிடப்படாது என தெரிவித்தார்.
மக்கள் பருப்பு வாங்கும்போதும், சீனி வாங்கும்போது, ரீலோட் செய்யும்போதும் வரியாக அறிவிடப்பட்டு சேர்க்கப்பட்ட மக்களின் பணமே நட்டஈடாக வழங்கப்பட உள்ளது எனவும் தெரிவித்தார்.

சீன உரக் கப்பலுக்கு நட்டஈட்டை வழங்கும்போது அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ, நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் அமெரிக்காவில் உள்ள வங்கிக் கணக்கிலிருந்து பணம் அறவிடுவதில்லை என்றார்.
புதியது பழையவை