மன்னார் - தலைமன்னார் பிரதான வீதி, ஓலைத்தொடுவாய் பகுதியில் வெட்டுக்காயங்களுடன் குடும்பஸ்தர் ஒருவர் சடலம் மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்டவர் புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான அப்துல் ரசாக் முஹமது ஹவ்ஸ் (வயது-51) என தெரிய வந்துள்ளது.
குறித்த சம்பவம் இன்று ஞாயிற்றுக் கிழமை (26) காலை 11 .30 மணியளவில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த மன்னார் காவல்துறையினர் சடலத்தை மீட்டுள்ளதுடன், சடலத்தில் பலத்த வெட்டுக் காயங்கள் காணப்படுவதான கூறியுள்ளனர்.