ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தில் ராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் பாராளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தன் பிரதேச செயலாளர் பிராந்திய புவிச்சரிதவியல் பொறியியலாளர் பிரதேச மணல் அகழ்வு உரிமையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட கூட்டத்தில் ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரிவில் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்ட தீர்மானம் ஒன்றுக்கு அமைய மூடப்பட்டிருந்த வீதியினை திறப்பதற்கு நான்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும் ஆளுநரும் சுற்றாடல் அமைச்சின் செயலாளரும் 15 மில்லியன் அதாவது 150 லட்சம் ரூபாய் டீல் பேசி பாதையை திறக்கும்படி தனக்கு அழுத்தம் பிரயோகித்ததாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய புவிச்சரிதவியல் சுரங்கங்கள் பணியகத்தின் பொறியியலாளர் அவர்கள் குறிப்பிட்டார்.
மக்கள் நலன் சார்ந்து மூடப்பட்ட பாதையினை சட்டவிரோதமாக மற்றவர்களுக்காக திறந்து விடுவதற்கு நான்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும் ஆளுநர் அவர்களும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அவர்களும் சட்டவிரோதமாக பணம் கையாடல் ஈடுபட்டமை இவ்விடத்தின் மூலம் தெரிய வருகின்றது கடந்த காலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோதமாக மண் அகழ்வது இராஜாங்க அமைச்சரும் பிள்ளையான் அவர்கள் ஒருங்கிணைந்து ஈடுபடுவதாக பல சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக செங்கலடி பிரதேச செயலகப்பிரிவில் மணல் கொள்ளைக் காரர்களின் தலைவர்களாக பிள்ளையான் அவர்கள் செயற்படுவதாக சொல்லப்படுகின்ற நிலையில் அவர் கலந்து கொண்ட கூட்டத்தில் பொறுப்பு வாய்ந்த ஒரு அதிகாரி வெளிப்படையாக கூறியிருப்பது மிக முக்கியமான ஒரு விடயமாகும் மண் கொள்ளையில் ஈடுபடுபவர்களுக்கு இவ்வாறான வசதி வாய்ப்புகளை செய்து கொடுப்பதற்கு மிகக் கூடுதலான பணம் கையாளப்படுவது ஆட்சியாளர்களின் ஆதரவுடன் என்பது தெளிவு படுத்துகின்றது.
இந்நிலை தொடருமானால் மட்டக்களப்பு மாவட்டம் பல்வேறு சுற்றாடல் நெருக்கடிகளை எதிர் காலத்தில் சந்திக்கும் என்பதில் ஐயமில்லை அரசியல் தலைவர்கள் இவ்வாறு நடக்க எதிர்த்தரப்பு அரசியல்வாதிகள் இது தொடர்பாக மௌனமாக இருப்பதும் தற்போது சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது மாவட்ட பொறியியலாளர் உடய குரல் ஒலிப்பதிவு பதிவிடப்பட்டுள்ளது.
இக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது பிரதேச செயலகத்தில் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு உத்தியோகத்தர்கள் கீழ்த்தளத்தில் சோதனையிட்டு கொண்டிருந்ததாக சொல்லப்படுகின்றது.
லஞ்சம் ஊழல் ஆணைக்குழுவினர் முன்னிலையிலேயே இவ்வாறான லஞ்சம் தொடர்பாக நாட்டு மக்களுக்கு எவ்வாறான பலனைப் பெற்றுக் கொடுக்கும் என்னும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.