தனியாருக்கு சொந்தமான Cessna 172 ரக விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது -களத்தில் மீட்பு குழு

தனியாருக்கு சொந்தமான Cessna 172 ரக விமானம் ஒன்று கட்டுநாயக்க கிம்புல்லாபிட்டிய பிரதேசத்தில் அவசரமாக தரையிறங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனை அடுத்து விமான படையின் மீட்பு அணி அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தின் போது விமானத்தில் இருந்த மூவா் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அவர்கள், மருத்துவமனையில் அனுமதி்க்கப்பட்டுள்ளனர் என்றும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



புதியது பழையவை