மகாத்மா காந்தியின் 74 வது சிரார்த்த தினநிகழ்வு

மகாத்மா காந்தியின் 74 ஆவது சிரார்த்த தினம் இன்றைய தினம் நினைவு கூரப்பட்டது.

அகில இலங்கை காந்தி சேவா சங்கம் மற்றும் இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ் போதனா வைத்திய சாலை முன்றலில்  உள்ள மகாத்மா காந்தியின் உருவச்சிலை அமைந்துள்ள இடத்தில் மகாத்மா காந்தியின் 74 ஆவது சிரார்த்த தினம் இன்றைய தினம் இடம்பெற்றது.

மகாத்மா காந்தியின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டு அகில இலங்கை காந்தி சேவா சங்கத்தின் அதிகாரபூர்வ வெளியீடான காந்தீயம் பத்திரிகையும் இன்றைய தினம் வெளியிட்டு வைக்கப்பட்டது.

காந்தியம் பத்திரிகை வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான சீவி விக்னேஸ்வரனால் வெளியிடப்பட்டது.

மகாத்மா காந்தியின் 74 வது சிரார்த்த தின நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான சித்தார்த்தன் சி.வி விக்னேஸ்வரன் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான கஜதீபன் சிவாஜிலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
புதியது பழையவை