நாட்டில் மூன்றாவது நாளாக 800க்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

நாட்டில் கடந்த 24 மணிநேர காலப்பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 845 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவரும் இராணுவ தளபதியுமான ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 6 இலட்சத்து ஆயிரத்து 048 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 75 ஆயிரத்து 932 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 9 ஆயிரத்து 832 பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 12 பேர் உயிரிழந்துள்ளமை நேற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 284 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, நாட்டில் ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளான மேலும் 75 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறை பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் வழங்கப்பட்ட மாதிரிகளின் பரிசோதனை முடிவுகளுக்கு அமைய இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக நாட்டில் ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளான 208 பேர் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

இதற்கமைய நாட்டில் ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 283 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை