லிட்ரோ நிறுவனத்திற்கு திடீரென பயணமான அரச தலைவர் கோட்டாபய

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கெரவலபிட்டிய - முத்துராஜவெல பகுதியிலுள்ள லிட்ரோ எரிவாயு சேமிப்பு முனையத்திற்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளதாக அரச தலைவரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெசார ஜயசிங்க பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

நாட்டில் நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு மற்றும் எரிவாயுவுடன் தொடர்புடைய வெடிப்புச் சம்பவங்கள் போன்றவற்றை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

லிட்ரோ நிறுவனத்தின் புதிய தலைவராக ரேணுக பெரேரா  நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை