புகையிரத நிலைய அதிபர்களின் தொழிற்சங்கப் பேராட்டத்தால், யாழ்ப்பாணத்தில் இருந்து தைப்பொங்கல் பண்டிகைக்காக சொந்த இடங்களுக்குச் செல்ல எதிர்பார்த்தவர்கள் சிரமங்களுக்குள்ளாகியுள்ளனர்.
காலை 9:45 யாழ்ப்பாணம் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் யாழ்தேவி புகையிரதம் சேவையில் ஈடுபட வில்லை.
அத்தோடு 1: 45க்கு புறப்படும், இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் புகையிரதமும் சேவையில் ஈடுபடவில்லை.
யாழ்தேவி புகையிரதம் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில் தரித்து நிற்கின்றது.
இதனால் முன்பதிவு செய்து புகையிரதத்தில் பயணம் செய்வதற்கு வந்த பயணிகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டதுடன் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
தூர பிரதேசங்களிலிருந்து முச்சக்கர வண்டி மற்றும் வாகனங்களில் வந்தவர்கள் மீண்டும் அதே வாகனங்களில் திரும்பி சென்றனர்.
நாளைய தினம் தமிழர்களின் முக்கிய பண்டிகையான தைப்பொங்கலுக்காக தமது சொந்த மாவட்டங்களுக்கு செல்ல இருந்தவர்களும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றதை காணக்கூடியதாக இருந்தாக எமது செய்திளார் குறிப்பிட்டார்.