கற்பிட்டி, நாச்சிக்கள்ளி பகுதியில் இன்று (29)அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பாலக்குடா பகுதியில் திருமண நிகழ்வை முடித்துவிட்டு சென்ற காரொன்றே வேகக்கட்டுப்பாட்டையிழந்து வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது காரில் பயணித்த மூவர் படுகாயங்களுக்குள்ளாகிய நிலையில் கற்பிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முற்பட்ட வேளை ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பலத்த காயங்களுக்குள்ளாகிய மேலும் இருவர் கற்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது காரின் சாரதி மேலதிக சிகிச்சகளுக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
விபத்தில் உயிரிழந்தவர் குறிஞ்சிப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளம் குடும்பஸ்தரென பொலிஸார் தெரிவித்தனர்.