மின்தடை குறித்து இறுதித் தீர்மானம்

மின்தடை குறித்து இறுதித் தீர்மானம் எடுப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தலைமையில் தற்போது இடம்பெற்றுவருகின்றது.

மின்சாரம், எரிசக்தி, போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் அந்த அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் இதில் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சார விநியோகம் தொடர்பான தற்போதைய நெருக்கடி தொடர்பில் விரிவான கலந்துரையாடல்களின் பின்னர் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு இன்று பிற்பகல் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
புதியது பழையவை