திருகோணமலை – மூதூரில் இடம்பெற்ற கோரவிபத்து


இன்று (10)காலை திருகோணமலை – மூதூரில் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் 26 பேர் காயமடைந்துள்ளதுள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த அனைவரும் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அம்பாறையிலிருந்து திருகோணமலை நோக்கி வந்துகொண்டிருந்த தனியாருக்கு சொந்தமான பேருந்தும், மூதூரிலிருந்து சேருவில நோக்கி சென்று கொண்டிருந்த லொறியும் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

அதேவேளை இந்த பேருந்தில் அதிகளவில் அரச உத்தியோகத்தர்களே பயணித்ததாக கூறப்படும் நிலையில், இதுவரைக்கும் 26 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் டிப்பர் வாகனத்தின் சாரதியின் கால்கள் உடைந்துள்ளதாகவும் வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். 

மேலும் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


புதியது பழையவை